இந்தியா – சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்து சேவை மற்றும் எல்லை வர்த்தகத்தைத் தொடங்க இருநாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டோக்லாம் நெருக்கடிக்குப் பின்பு இருநாடுகள் இடையே விமானங்கள் இடைநிறுத்தப்பட்டதாகவும், கொரோனா தொற்றுநோய் காரணமாக விமானச் சேவை மேலும் தாமதமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ டெல்லிக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே நேரடி விமானச் சேவையைத் தொடங்க இந்தியாவும், சீனாவும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உத்தராகண்ட், இமாச்சல், சிக்கிம் வழியாக எல்லை வர்த்தகத்தை மீண்டும் திறக்கவும் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் திபெத்தில் உள்ள கைலாஷ் மலை, மானசரோவர் ஆகிய பகுதிகளில் இந்தியா யாத்திரையைத் தொடரவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.