கோவை மாவட்டம், வாளையார் சோதனைச் சாவடி வழியாகக் கேரளாவிற்குக் கடத்த முயன்ற இரண்டரை கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அப்பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்த க.க.சாவடி போலீசார், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மடக்கி சோதனை நடத்தினர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் வெள்ளி கட்டிகள் மற்றும் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.
அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றைப் பறிமுதல்செய்த போலீசார், அதனைக் கடத்த முயன்ற இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.