தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் இழுத்துச் செல்லப்பட்டார்.
பாங்காங்கில் கடந்த சில தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், ஏரி உடைப்பு ஏற்பட்டதால் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்றவர் அடித்துச் செல்லப்பட்டார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த மீட்புப் படையினர் துரிதமாகச் செயல்பட்டு அந்த நபரை மீட்டனர்.