காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே 6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்ற மேற்கு வங்க மாநில நபரை போலீசார் கைது செய்தனர்.
செல்லம்பட்டிடை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில், 6-ம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த வடமாநில நபர், மாணவியை அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றுள்ளார்.
சுதாகரித்து அவரிடம் இருந்து தப்பிய மாணவி தலைமை ஆசிரியரிடம் நடந்ததைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடம் வந்த போலீசார் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சாகிப் என்ற நபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.