நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவின் மேற்கூரையில், சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்த அவலம் அரங்கேறியுள்ளது.
வி.கே.புரம், கல்லிடை, மன்னார் கோயில் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகப்பேறு பிரிவு புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகள் இந்த மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேர்ந்த அசம்பாவிதம் நோயாளிகள் மற்றும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.