ஜம்மு-காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப் பணி 7வது நாளாக நடைபெற்று வருகிறது.
கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட சசோட்டி கிராமத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர்,ராணுவத்தினர், போலீசார் உள்ளிட்டோர் 7வது நாளாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.