அமெரிக்காவில் யூடியூபர்கள் இருவர் FOOD VLOG செய்யும் போது உணவகத்தின் கண்ணாடி மீது கார் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபலர் யூடியூபர்கள் பேட்ரிக் பிளாக்வுட் மற்றும் நினா அன்ரேட்டட். இவர்கள் இருவரும் இணைந்து FOOD VLOG வீடியோ எடுத்து அவற்றை யூடியூப்பில் பதிவிட்டு வருகின்றனர்.
அதன்படி வழக்கம் போல் FOOD VLOG வீடியோ எடுப்பதற்காக டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனில் உள்ள உணவகம் ஒன்றில் விதவிதமான உணவுகளை சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று உணவகத்தின் கண்ணாடி மீது மோதியது. அப்போது கண்ணாடி தூள் தூளாக உடைந்து இருவர் மீதும் விழுந்தது. இதுகுறித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நினா அன்ரேட்டட், இது எங்கள் கடைசி உணவாக இருந்திருக்கலாம் என நினைத்ததாகப் பதிவிட்டுள்ளார்.