மதுரையில் நாளை நடைபெறவுள்ள தவெக மாநாட்டையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் திரும்பப் பெற்றார்.
மதுரையில் நடைபெறவுள்ள தவெகவின் 2வது மாநில மாநாடு காரணமாக திருப்பரங்குன்றம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 14 டாஸ்மாக் கடைகள் நாளை மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்றுள்ளது. அதில், தவெகவின் மாநாட்டினால் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படாது என்றும்,
பொதுமக்களுக்குச் சிரமம் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ரத்து செய்யப்பட்டது பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.