திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தைப் பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கவுள்ளதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தான் தொடங்கும் தொழில் வெற்றி அடைய வேண்டுமென்று ஏழுமலையானிடம் வேண்டி, ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கிய பக்தர் ஒருவர், சுமார் ஏழாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கிறார்.
இதன் காரணமாக தன்னுடைய நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குகளை விற்பனை செய்து, 121 கிலோ தங்கத்தை ஏழுமலையானுக்குக் காணிக்கையாகச் செலுத்தவுள்ளார். இதன் மதிப்பு சுமார் 140 கோடி ரூபாய் என்று சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.