அஜித்குமார் லாக்கப் கொலை வழக்கு தொடர்பான முதற்கட்ட குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இதுதொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் இன்று குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி சாட்சிகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட தனிப்படை காவலர்கள் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் முதற்கட்ட குற்றப்பத்திரிகை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் மானாமதுரை டிஎஸ்பியாக பணியாற்றிய சண்முகநாதன் மற்றும் சில காவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.