வார் 2 திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்பை ஆக்சன் திரில்லர் படங்களில் ஒன்றான வார் 2 கடந்த 14-ம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உலகளவில் வெளியானது.
அயன் முகர்ஜி இயக்கி உள்ள இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்படம் உலகளவில் 5 நாட்களில் 300 கோடி ரூபாயும், இந்தியாவில் மட்டும் 240 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.