பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாகக் கொடைக்கானலில் பிரபல பிரியாணி கடை உரிமையாளர் இன்தாத்துல்லாவை NIA அதிகாரிகள் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தில் மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடிய பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 5 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாகத் திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதேபோல் கொடைக்கானல், பூம்பாறையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்படி கொடைக்கானல் நகர் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த இன்தாத்துல்லா என்பவரை NIA அதிகாரிகள் கைது செய்தனர்.