நடிகர் ரவி மோகனின் சொத்துக்களை முடக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப் படத் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
படத்தில் நடிக்கப் பெற்ற முன்பணமான 6 கோடி ரூபாயை வழங்க நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக்கோரி, பாபி டச் கோல்டு யுனிவர்சல் படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 5 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கான சொத்து உத்தரவாதத்தைத் தாக்கல் செய்ய, நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், சொத்து உத்தரவாதம் தாக்கல் செய்யப்படாததால் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
அப்போது, ரவி மோகனின் சொத்துக்களை முடக்க உத்தரவிட வேண்டும் எனத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாகத் தாக்கல் செய்யப் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கினர்.