கேரளாவில் அரசு மதுபான கடையில் மேலாளரின் மண்டை உடைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.
கொட்டாக்கர பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில், பீர் வாங்கிய நபர்கள் கடையைப் படம் பிடிக்க முயன்றுள்ளனர். இதனை மேலாளர் தட்டிக்கேட்கத் தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆவேசமடைந்த நபர்கள் மேலாளரின் மண்டையை பீர் பாட்டிலால் உடைத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை உள்ளே அடைத்து விட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் கதவை உடைத்துக் கொண்டு அவர்கள் ஓட்டம்பிடிக்க சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.