தொடர்ந்து 3 முறை 400 கோடி ரூபாய் வசூலித்த படங்களை கொடுத்த இயக்குனரின் பட்டியலில் எஸ்.எஸ்.ராஜமவுலி, ராஜ்குமார் ஹிரானி வரிசையில் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார்.
ரஜினிகாந்துடன் இணைந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாகக் கூலி படத்தை உருவாக்கினார். இப்படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும் 5 நாட்களில் உலகளவில் 400 கோடி ரூபாய் வசூலித்தது.
இதன் மூலம் தொடர்ந்து 3 முறை 400 கோடி ரூபாய் வசூலித்த படங்களை கொடுத்த இயக்குனர்கள் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார்.
பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்த எஸ்எஸ் ராஜமவுலியும், 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு போன்ற படங்களை இயக்கிய பாலிவுட் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியும் இந்த பட்டியலில் உள்ளனர்.