விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள், ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டம் புதூர் பகுதியைச் சார்ந்த ராஜவள்ளி-தர்மர் தம்பதியின் இரு மகள்களான மாரியம்மாள், முத்துபேச்சி ஆகியோர், மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் என்பதால் திருமணமாகாமல் பெற்றோர் அரவணைப்பில் வாழ்ந்து வந்தனர்.
இதனால் வருத்தத்தில் இருந்த தாய் ராஜவள்ளி, தனது இரு மகள்களுடன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.