அக்னி 5 ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது டிஆர்டிஓ நிறுவனம்.
ஒடிசா மாநிலத்தின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து சீறிப்பாய்ந்த அக்னி 5 ஏவுகணை இலக்கை துல்லியமாகத் தாக்கி அழித்துள்ளது.
புகையைக் கக்கியபடி ஏவுகணை சீறிப்பாய்ந்த வீடியோவை டிஆர்டிஓ நிறுவனம் வெளியிட்டிருக்க, எதிரி நாடுகள் கலக்கமடைந்துள்ளன.
MULTIPLE INDEPENDENTLY TARGETABLE RE-ENTRY தொழில்நுட்பத்தில் இயங்குவதால் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை ஒரே ஏவுகணை மூலம் குறிவைத்துத் தாக்க முடியும். உலகில் ஒரு சில நாடுகளே இந்த தொழில்நுட்பத்தை வைத்திருக்கும் நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது