மகன் காளிதாஸுடன் இணைந்து நடிகர் ஜெயராம் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
மலையாளத்தின் மூத்த நடிகராக இருக்கும் ஜெயராம் தனது மகனுடன் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கிறார். 2003-இல் என்ட வீடு அப்புவிண்டேயும் என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
இந்நிலையில் ஆகாஷங்கள் ஆயிரம் என்ற படம் தமிழில் ஆசைகள் ஆயிரம் என்ற பெயரில் வெளியாக உள்ளது.
ஸ்ரீகோகுலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஜி.பிரஜித் இயக்குகிறார்.22 ஆண்டுகளுக்குப் பிறகு மகன் காளிதாஸுடன் இணைந்து நடிகர் ஜெயராம் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.