இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சனையை படிப்படியாகக் குறைப்பது குறித்து வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் கி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந் நிலையில், இந்தியா – சீனா எல்லையில் உள்ள பிரச்சனையை படிப்படியாகக் குறைப்பது குறித்து வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி, சர்ச்சைகள் உள்ள பகுதிகளை அடையாளம் காண வேண்டும் எனவும், அதன் எல்லைகளைக் குறிக்கத் தெளிவான எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், லடாக்கில் இரு தரப்பினரும் அச்சுறுத்தலை உணராமல் இருப்பதை உறுதி செய்வதற்காகக் கனரக பீரங்கிகள், ராக்கெட்டுகளை பின்வாங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.