குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்த கூட்டணி கட்சி தலைவர்களுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள நமது மண்ணின் மைந்தரும், மாண்புமிகு மகாராஷ்டிர ஆளுநருமான சிபிஆர்
அவர்களுக்கு தமிழகத்தின் தலைவர்கள் தங்களது வரவேற்பையும் ஆதரவையும் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
குறிப்பாக, அஇஅதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இபிஎஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், , அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன்,
, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திருமதி. @AmmavinVazhi தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச் செயலாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி.சண்முகம், , இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் தமிழக பாஜக
சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.