டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்திய நபரை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி சிவில் லைன்சில் உள்ள முதலமைச்சர் ரேகா குப்தா இல்லத்தில் நேற்று “மக்கள் குறை கேட்பு” நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களிடம் மனுக்களை பெற்றபோது, திடீரென முதலமைச்சர் ரேகா குப்தா மீது ஒருவர் தாக்குதல் நடத்தினார்.
இதையடுத்து அங்கிருந்த காவலர்கள், அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்த ராஜேஷ் பாய் கிம்ஜி என்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ் பாய் கிம்ஜியை நீதிமன்றத்தில் முன்னிறுத்திய டெல்லி போலீசார், அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.