கன்னியாகுமரி அருகே திமுக பிரமுகருக்குச் சொந்தமான எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பளுகல் பகுதி பேரூராட்சி திமுக தலைவர் லிஜியின் கணவர் விஜின் ஜெயபோஸ்-க்கு சொந்தமான சமையல் எண்ணெய் நிறுவனத்தில், தயாரிக்கும் எண்ணெய்யில் ரசாயனம், மாமிச கொழுப்பு உள்ளதாகவும் இவை கேரள உணவு பாதுகாப்புத்துறை ஆய்வில் உறுதியாகியுள்ளதாகவும் சமூக ஆர்வலர் அருண் குற்றம்சாட்டியுள்ளார். எனவே அந்த நிறுவனம் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.