மேற்குலக நாடுகள் எதிர்க்கும் போதே இந்தியா சரியான திசையில் பயணிப்பது உறுதியாகிவிட்டதாக ரஷ்ய தூதர் ரோமன் பாபுன்ஸ்கின் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீதான 50 சதவீத வரிவிதிப்பு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அமெரிக்கா எதிர்க்கும் எந்தவொரு வர்த்தகமும் நிச்சயம் தவறாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை எனக் கிண்டலாகத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், இந்தியா – ரஷ்யா இடையிலான வர்த்தக வாய்ப்பு இரட்டிப்பாகி உள்ளதாகவும் ரோமன் பாபுன்ஸ்கின் மகிழ்ச்சி தெரிவித்தார்
இதனிடையே ரஷ்ய தூதர் ரோமன் பாபுன்ஸ்கின், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் தெரிவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்ரீகணேஷ் கர்தே ஹை என ரோமன் பாபுன்ஸ்கின் வாழ்த்து தெரிவிக்க, செய்தியாளர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.