ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடுத்தியிருந்த ஆடை தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயன்ற நிலையில், அது தொடர்பான பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார்.
எப்போதும் ராணுவ ரக உடையை அணிவதில் ஆர்வம் காட்டும் ஜெலன்ஸ்கி, இந்த முறை அதிலிருந்து மாறுபட்டுக் காணப்பட்டார்.
உக்ரேனிய ஆடை வடிவமைப்பாளர் விக்டர் அனிஷிமோவ் தயாரித்த கருப்பு நிற உடையில் ஜெலன்ஸ்கி ஹாலிவுட் ஹீராக்களுக்கே டஃப் கொடுக்க, அவரது ஆதரவாளர்கள் மெய் சிலிர்த்துவிட்டனர். ட்ரம்புக்கும் ஜெலன்ஸ்கி உடுத்தியிருந்த ஆடை பிடித்துப் போக, கருப்பு நிற ஆடைக்கு உக்ரைனில் கிராக்கி அதிகரித்துள்ளது.