சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் காரில் கடத்தப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீராணம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற காரை நிறுத்த முயன்றனர்.
ஆனால் காரை நிறுத்தாத ஓட்டுநர் அதிவேகத்துடன் சென்றார். பின்னர் வாகனத்தை மடக்கிப் பிடித்த போலீசார் சோதனையிட்டபோது அதில், குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், தப்பியோடிய வாகன ஓட்டிகளை தேடி வருகின்றனர்.