“லிபுலேக்” கணவாய் வழியாக மீண்டும் வர்த்தகத்தைத் தொடங்க நேபாளம் எதிர்ப்பு தெரிவித்ததற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா – சீனா இடையே “லிபுலேக்” கணவாய் வழியாகப் பல ஆண்டுகளாக வர்த்தகம் நடைபெற்று வந்தது. 2020ம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குதலில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தற்போது இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு ஏற்பட்டதை அடுத்து “லிபுலேக்” கணவாய் வழியாக மீண்டும் வர்த்தகம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நேபாள அரசு, “லிபுலேக்” கணவாய் தங்களுக்குச் சொந்தமானது எனவும் எனவே இருநாடுகளின் இந்த முடிவு ஆட்சேபனைக்குரியது எனவும் கூறியது.
இதற்குக் கண்டனம் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், நேபாள அரசின் இந்த கூற்று ஆதாரமற்றவை, வரலாற்று ஆதாரங்கள் இல்லாதவை என்றும் தெரிவித்துள்ளது.
“லிபுலேக்” கணவாய் வழியாக 1954ம் ஆண்டு முதல் இந்தியா- சீனா இடையே வர்த்தகம் நடைபெற்று வருவதாகவும் வெளியுறவு அமைச்சக செய்தியாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.