ஜம்மு-காஷ்மீரின் அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள்- ராணுவத்தினர் இடையே 12வது நாளாக கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ளூர் போலீசார் உதவியுடன் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு “ஆப்ரேசன் அகல்” எனப் பெயரிட்டுப்பட்டுள்ளது.
11 நாட்களாக நடைபெற்று வரும் துப்பாக்கிச்சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 9 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
ராணுவத்தினர் நடத்திய பதிலடியில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் 12வது நாளான இன்றும் அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.
தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய அமெரிக்காவின் M4 ரகத் துப்பாக்கிகள், நவீன தொலைநோக்கிகள், இரவு பார்வை சாதனங்கள், ஜிபிஎஸ் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.