தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் ஒரு லட்சத்து 45 லட்சம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
2025, 26 ஆம் கல்வியாண்டின் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை பெறப்பட்டன.
அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுச் சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 14 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு, பொதுப்பிரிவு கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 481 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும், 44 ஆயிரத்து 979 இடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் 22 ஆயிரத்து 450 பேர் அதிகமாக பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.