தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் குருநாதன் என்பவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
தகவலறிந்த சென்ற வனத்துறையினர், அவரது பேரன்கள் ரித்தீஷ் மற்றும் அபினேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் வீட்டிலிருந்த வன விலங்குகளின் தோல், கால் நகங்களைப் பறிமுதல் செய்து குருநாதனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.