தமிழக கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைவில் இருந்த பழைய பேருந்து நிலையம், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்தது. இதையடுத்து, புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை NJD கட்டுமான நிறுவனம் ஒப்பந்தம் எடுத்ததையடுத்து பணிகள் தொடங்கின.
சுமார் 9 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணியில் வெறும் 5 பணியாளர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கட்டுமான பணிகள் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் கடும் அவதிக்குள்ளான வாகன ஓட்டிகள், பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க கட்டுமான நிறுவனத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.