இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா - சிறப்பு கட்டுரை!
Jul 29, 2026, 06:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Aug 21, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள நிலையில், இந்தியப் பொருட்களை அதிகளவில் வாங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

உக்ரைன் போரைக் காரணம் காட்டி உலக நாடுகளை மிரட்டி வருகிறது அமெரிக்கா. ரஷ்யாவுடன் யாரும் வர்த்தக தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது எனத் தெரிவித்துள்ள அமெரிக்கா, மீறுபவர்களுக்கு அதிக வரி விதித்து வருகிறது.

அதிகபட்சமாக இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த வரி விதிப்பால் அதிக பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில்தான், தன்னிடம் வர்த்தகம் செய்வதால் பாதிப்பைச் சந்தித்துள்ள இந்தியாவுக்கு உதவ ரஷ்யா முன்வந்துள்ளது.

இது குறித்து டெல்லியில் பேசிய ரஷ்யத் தூதரக அதிகாரி ரோமன் பாபுஷ்கின்(Roman Babushkin), அமெரிக்காவிற்கு இந்தியப் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தடை ஏற்பட்டால், அப்பொருட்களை வாங்க தாங்கள் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகள் நவகாலனித்துவ போக்கை கடைப்பிடித்து வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், இந்தியா மீதான அமெரிக்காவின் அழுத்தம் நியாயமற்றது என்றும், ஒருதலைபட்சமானது என்றும் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் மிரட்டல் காரணமாக இந்தியா தங்களிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைத்துக்கொள்ளும் என நினைக்கவில்லை எனக் கூறியுள்ள அவர், இந்தியா தங்களுக்கு மிகவும் முக்கியமான நாடு எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா இறக்குமதியை நிறுத்திக்கொள்வதாக வைத்துக்கொண்டாலும், அது மேற்கத்திய நாடுகள் உடனான  சுமூக உறவுக்கு வழிவகுக்காது எனவும் ரஷ்யத் தூதரக அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனெனில் அது மேற்கத்திய நாடுகளின் இயல்பு அல்ல என்பதை அண்மைக் காலமாக நடைபெற்று வரும் சம்பவங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மேற்கத்திய நாடுகள் உங்களை விமர்சித்தால், நீங்கள் அனைத்தையும் சரியாகச் செய்து வருகிறீர்கள் என்று அர்த்தம் எனவும்  ரோமன் பாபுஷ்கின் கூறியுள்ளார்.

அண்மையில் ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியுடன் தொலைப்பேசி வாயிலாகப் பேசியதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டிய அவர், இந்த ஆண்டு இறுதிக்குள்  அதிபர் புதின் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.  இதுவரை இந்தியாவின் நம்பர் ஒன் வர்த்தக கூட்டாளியாக அமெரிக்காதான் இருந்து வந்தது. ஆனால், ட்ரம்ப் எடுத்து வரும் தவறான முடிவுகளால் இந்தியாவின் நெருங்கிய கூட்டாளியாக ரஷ்யா மாறி வருகிறது.

Tags: ரஷ்யாReady to buy Indian goods: Russia extends the wheel of loveஇந்திய பொருட்களை வாங்க தயார்Ruusiarussia - indiaIndia
ShareTweetSendShare
Previous Post

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

Next Post

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies