நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நாட்டிற்கும், அரசுக்கும் பயனுள்ளதாக அமைந்ததென நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இதுதொடர்பாக பேசிய அவர், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பல புதிய எம்.பி.க்கள் பேச வாய்ப்பில்லாமல் போனதாகவும், கூட்டத்தொடரை நடத்த விடாமல் எதிர்க்கட்சியினர் இடையூறு செய்துகொண்டே இருந்ததாகவும் கூறியுள்ளார்.
சுபான்ஷு சுக்லாவை வாழ்த்த அனுமதிக்காமல் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டது வருத்தத்திற்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.