தான் எடுத்த முடிவுகள் அனைத்தும் இல.கணேசன் சொன்ன முடிவுகள் தான் என பாஜக மூத்த தலைவர் ஹெச். தெரிவித்துள்ளார்.
மறைந்த நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசனின் புகழஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் பேசியதாவது :
1974 லிருந்து நான் இல கணேசனோடு இணைந்து பணியாற்றியுள்ளேன். நான் இதுவரை எடுத்த முடிவுகள் நானாக எடுத்த முடிவுகள் இல்லை, எல்லாம் இல கணேசன் சொன்ன முடிவுகள் தான்.
தவிர்க்கமுடியாத அமைப்பு தலைவர் இல கணேசன் தான். பாஜகவில் ஒவ்வொருராக தேர்ந்தெடுத்து பொறுப்பு கொடுத்தவர் இல கணேசன். கட்சியில் யாராக இருந்தாலும் பொறுப்பை கொடுத்து ஊக்கப்படுத்தி வளர்த்தெடுத்தவர் இல கணேசன்.
51 ஆண்டு காலமாக எங்கள் வீட்டில் அவரும், அவர் வீட்டில் நானும் உறுப்பினராக இருந்தோம். கணேசன் நம்மிடையே இல்லை என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இல கணேசன் சென்ற பாதையிலேயே நாம் பயணித்து நமது சித்தாந்தத்தை வலிமை பெற செய்வது தான் நாம் அவருக்கு செலுத்துகின்ற உண்மையான அஞ்சலி என ஹெச்.ராஜா கேட்டுக்கொண்டார்.