பல இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை இ.ல.கணேசனுக்கு உண்டு என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சென்னையில் நடைபெற்ற நாகாலாந்து ஆளுநர் . இ.ல. கணேசன் அவர்களின் புகழஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியதாக தெரிவத்துள்ளார்.
இந்த நிகழ்வில் அண்ணனின் நினைவை பகிர்ந்து கொண்டு, நம் பாரத தேசத்துக்கு அவர் ஆற்றிய பணிகளை எடுத்துரைத்து புகழஞ்சலி செலுத்தியதாக கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்காகவும், பாஜக மற்றும் நம் பாரத தேசத்திற்காகவும் அவர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பல இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. என்றும் அவர் காட்டிய பாதையில், அவரது நினைவோடு நாம் நடைபோடுவோம் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.