நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 26 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ஆம் தேதி தொடங்கியது.
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆப்ரேஷன் சிந்துார் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டன.
எதிர்க்கட்சியினரின் அமளிக்கு நடுவில் மக்களவையில் 12 மசோதாக்களும், மாநிலங்களவையில் 14 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. பணம் வைத்து விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வருமான வரி, இந்திய துறைமுகங்கள், இந்திய மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா என மொத்தம் 26 மசோதாக்கள் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன.