பொன்னமராவதி அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு சலுவை அறிவிக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வையாபுரி பகுதியில் புதிதாக தனியார் பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவையொட்டி 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் இலவசம் என அறிவிக்கப்பட்டது.
மேலும், ஐந்து லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கினால் இரண்டரை லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இலவசம் என்று விளம்பரம் செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தனியார் பெட்ரோல் நிலையத்தில் குவிந்தன. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு லாரி, டிராக்டர், ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்களும், கார்களும் வரிசை கட்டி நின்று பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்பி சென்றன.