கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்தை தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மம்கூடத்தில், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் மற்றும் பெண் எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் தெரிவித்தனர். இது தொடர்பாக கட்சியின் மேலிடத்திற்கு புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இருவரும் குற்றம்சாட்டினர்.
ராகுல் மம்கூடத்தில் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாலக்காட்டில் அவரது எம்எல்ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தான் வகித்து வந்த காங்கிரஸ் இளைஞரணி மாநில தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.