கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள திரையரங்கில் கேப்டன் பிரபாகரன் படத்தின் ரீ ரிலீஸ் காட்சியை பார்வையிட்ட பிரேமலதா கண்ணீர் சிந்தினார்.
விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் தமிழகம் முழுவதும் இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது.
நெய்வேலியில் உள்ள ஸ்ரீநிதி ரத்னா திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து, பிரேமலதா விஜயகாந்தும், மகன் விஜய பிரபாகரன், எல்.கே.சுதீஷ் ஆகியோரும் பார்வையிட்டனர். அப்போது விஜயகாந்தின் அறிமுகக் காட்சியை கண்டு பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் சிந்தினர்.