சென்னை, வானகரத்தில் கலாம் 2047 விழுதுகள் வேர்கள் நோக்கி என்ற குடிமை மற்றும் கலாச்சாரம் தொடர்பாக விழா நடைபெற்றது.
டாக்டர் அப்துல் கலாம் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் தொடர்ந்து ஏழு வருடங்களாக ஞானாக்னி அறக்கட்டளையின், மாணவர்களுக்கான விழாவை நடத்தி வருகிறது. அதன்படி, சென்னை வானகரம் ஸ்ரீ வாரு, வெங்கடாசலபதி பேலஸில் கலாம் 2047 விழுதுகள் வேர்கள் நோக்கி என்ற குடிமை மற்றும் கலாச்சார தொடர்பாக ஞானாக்னி அறக்கட்டளை சார்பாக மாணவர்கள் விழா நடைபெற்றது.
அப்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பாஜக மாநில பொதுச்செயலாளர் ராமா சீனிவாசன், பிறந்த தேதி இல்லாத ஒரு தேசத்திற்கு எப்போதுமே இறப்பு என்பது கிடையாது என்றும், பிறந்த தேதி இருந்தால் மட்டுமே இறப்பு எனவும் கூறியுள்ளார். நமது தேசத்தின் தெய்வீகமும், ஆன்மிகமும் பரவி இருப்பதாகவும் மாணவர்களுக்கு எடுத்து துரைத்தார்.