தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, அரசு பள்ளி வளாகத்தில் ஆட்டோ ஓட்டுநர் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தெப்பம்பட்டி பாலக்கோம்பை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிர்வாண நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மோப்ப நாய் மற்றும் தடயவியில் நிபுணர்களுடன் வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கிடந்தவர் தெப்பம்பட்டி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தங்கமலை என்பது விசாரணையில் தெரியவந்தது.
கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா தெரிவித்துள்ளார்.