ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பெங்களூருவில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்து 30 பயணிகளுடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. வாலாஜாப்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து சென்றபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல பேருந்து ஓட்டுநர் முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் லேசான காயங்களுடன் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நிலையில், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.