ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு உதகை – மேட்டுப்பாளையம் இடையேயான சிறப்பு மலை ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது.
விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் உதகை மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்பதால் சிறப்பு ரயில் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு மலை ரயில் சேவை இன்று முதல் தொடங்கும் என தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சிறப்பு மலை ரயில் புறப்பட்டு சென்றது. வரும் 30, செப்டம்பர் 5, 7 ஆகிய தேதிகளிலும் அக்டோபர் 2, 4, 17, 19 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை ஒன்பது 10 மணிக்கு புறப்படும் மலை ரயில், பகல் இரண்டு 25 மணிக்கு உதகை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.