இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை அந்நாட்டு அரசு கைது செய்தது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் எம்பி சசிதரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபராக பொறுப்பு வகித்தபோது, அரசின் நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அந்நாட்டின் முன்னாள் அதிபரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே கைது செய்யப்பட்டார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்பி சசிதரூர், அற்ப குற்றச்சாட்டுக்காக விக்ரமசிங்கேவை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளதாக சாடியுள்ளார்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விக்ரமசிங்கேவை அந்நாட்டு அரசு கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இலங்கையின் புதிய அரசு பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.