சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம் கோலாகலமாக நடத்தப்பட்டது.
இருபிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டன.
23 மாட்டு வண்டிகள் தயார் செய்யப்பட்டு தொடங்கிய இந்த போட்டியில் மாடுகளின் ரகங்களுக்கு ஏற்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டது . இறுதியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.