திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மின் மாற்றியில் ஏறிய நபர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.
தரணிவராகபுரம் பகுதியில் மின்மாற்றியில் கோளாறு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுதொடர்பாக புகாரளித்தும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாக கூறப்படும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த விஜயக்குமார் என்பவர் பழுதை சரிசெய்வதாகக் கூறி, மின்மாற்றியில் ஏறியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை பொதுமக்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.