ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது.
டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வகையில் வான் பாதுகாப்பு அமைப்பு தயாரிக்கப்பட்டது.
இந்த அமைப்பை ஒடிசா மாநிலம் சந்திப்பூர் கடற்கரையில் நேற்று டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதனை நடத்தியது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை IADWS பாதுகாப்பு அமைப்பு துல்லியமாக தாக்கியதாகவும், இந்த அதிநவீன உள்நாட்டு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாகவும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
சோதனை வெற்றி பெற்றதை அடுத்து, எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக சோதனை நடத்திய டிஆர்டிஓ மற்றும் இந்திய ஆயுதப்படை நிறுவனத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.