தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்கா தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்காய் நகரில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 420 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 24.5 ஓவரில் 155 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் கூப்பர் கானோலி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.