திருப்பூரில் 100 வயது பாட்டியின் பிறந்த நாளை 5 தலைமுறையை சேர்ந்த 97 பேரன், பேத்திகள் இணைந்து குடும்ப சங்கம விழாவாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரை சேர்ந்த அன்னபூரணி என்ற அன்னக்கிளி பாட்டிக்கு 6 மகன் 7 மகள் என 13 பிள்ளைகளும் 97 பேரன், பேத்திகளும் உள்ளனர்.
இந்நிலையில் அன்னக்கிளி பாட்டிக்கு 100 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து குடும்ப சங்கம விழாவாக கேக் வெட்டி கொண்டாடினர்.
தொடர்ந்து குடும்பமாய் அமர்ந்து பாடல்களுக்கு ஒன்றாக ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
100 வயது பாட்டியின் பிறந்தநாளை குடும்ப சங்கம விழாவாக கொண்டாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.