ராஜஸ்தான் மாநிலத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் உருவான திடீர் நீர்வீழ்ச்சியின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சாலைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதேபோல் சவாய் மாதோபூரிலும் கனமழை கொளுத்து வாங்கியது. இதனால் அப்பகுதியில் திடீர் பள்ளம் உருவாகியுள்ளது. நீர்வீழ்ச்சி போல் காட்சியளிக்கும் இந்த பள்ளத்தில் நீர் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.