ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் பண மழை பொழிய வைத்த நபரை பிடித்து போலீசார் எச்சரித்தனர்.
ரிட்ஜ் சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே நின்ற ஒருவர் பணத்தை அள்ளி வீதியில் வீசியுள்ளார். இதை பார்த்து அங்கிருந்த மக்கள் போட்டி போட்டிக் கொண்டு பணத்தை எடுத்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் பணத்தை அள்ளி வீசிய டெல்லியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை பிடித்தனர். அப்போது அவர் ஏழைகளுக்கு உதவுவதற்காக இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். தொடர்ந்து அவரை எச்சரித்த போலீசார் பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தனர்.